73வது நாளாக நீடிக்கும் உக்ரைன் – ரஷ்யா போர்…மேலும் 150 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவி: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!!

Author: Rajesh
7 May 2022, 3:14 pm

வாஷிங்டன்: உக்ரைனுக்கு மேலும் 150 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவியை அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24ம் தேதி போர் தொடங்கியது. போர் இன்று 73வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளன்ர்.

இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. அதேவேளை, உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 150 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள ராணுவம் மற்றும் பிற உதவிகளின் மொத்த மதிப்பு 3.8 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.

அதேபோல், உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவிகளை அனுப்ப நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்கும்படியும் அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவின் தொடர் ராணுவ உதவியால் உக்ரைன் – ரஷியா இடையேயான போர் முடிவுக்கு வராமலும், பேச்சுவார்த்தையின்றி தொடர்ந்து நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!