மியான்மரில் இரு தமிழர்கள் சுட்டுக்கொலை.. பயங்கரவாத கும்பல் நடத்திய கொலைவெறி தாக்குதல்..!

Author: Babu Lakshmanan
6 July 2022, 11:02 am

மியான்மரில் பயங்கரவாத கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தியா – மியான்மர் எல்லையான மணிப்பூரில் உள்ள மோரோவில் மோகன் (28) என்பவர் ஆட்டோ ஓட்டுநராகவும், அய்யனார் (35) என்பவர் சிறிய கடை ஒன்றையும் வைத்து நடத்தி வந்துள்ளார்.

இவர்கள் இருவரின் உடலும் டாமு என்ற பகுதியில் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இருவரையும் ஆயுதம் ஏந்திய பயங்கரவாத கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் இருநாட்டினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!