இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்…ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு: பீதியில் உறைந்த மக்கள்..!!

Author: Rajesh
5 April 2022, 11:13 am

ஜகர்த்தா: இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகி உள்ளது என அந்நாட்டின் வானிலை, பருவகால மற்றும் புவிஇயற்பியல் மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. கடந்த பிப்ரவரியில் இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா பகுதியில் ரிக்டரில் 6.1 அளவிலான கடுமையான நிலநடுக்கம் பதிவானது. இதில், பசமன் மற்றும் பசமன் பராத் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்த நிலநடுக்கத்தினால் 10 பேர் உயிரிழந்தனர். 13 ஆயிரம் பேர் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து சென்றனர். அதற்கு முன்பு கடந்த ஜனவரியில் செராம் பகுதியில் ரிக்டரில் 5.5 அளவிலான நிலநடுக்கம் பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ