குவைத் தீ விபத்தில் இன்னுயிரை ஈர்த்த 7 தமிழர்கள்.. கொச்சி வந்தடைந்த உடல் : பெற்றுக்கொண்ட அமைச்சர்!

Author: Udayachandran RadhaKrishnan
14 June 2024, 11:52 am

குவைத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலை கொண்டு வர, சிறப்பு விமானம் அனுப்பப்பட்டது. 7 தமிழர்கள், கேரளாவைச் சேர்ந்த 23 பேர் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் என 31 பேரின் உடல்கள் கொச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.

உடல்களைப் பெறுவதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி மற்றும் தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொச்சி விமான நிலையத்தில் உள்ளனர்.

கொச்சின் விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. எஞ்சியுள்ள உடல்களை டெல்லி விமான நிலையத்துக்கு கொண்டு சென்று, அங்கிருந்து அவர்களின் ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உயிரிழந்த 7 தமிழர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. ராம கருப்பண்ணன்- ராமநாதபுரம், வீராசாமி- தூத்துக்குடி, சின்னத்துரை – கடலூர், முகம்மது ஷரீப் விழுப்புரம், ரிச்சர்டு- தஞ்சாவூர், எபமேசன்- திருச்சி, கோவிந்தன்- சென்னை என தெரிய வந்துள்ளது.

  • Bharathiraja son Manoj death இறந்த பின்பும் இப்படியா..மனோஜ் சவப்பெட்டி மீது நடந்த மோசமான செயல்..பிரபலம் காட்டம்.!