ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்.. உலக சாதனையை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த பெண்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 December 2022, 4:10 pm

மனிதர்கள் பல வகையான வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் உலக சாதனைகளை செய்துள்ளனர்.

சமீபத்திய உலக சாதனையில் ஒரு பெண் ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்தார். நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மைதான்.

கின்னஸ் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சமீபத்தில் அதிர்ச்சியூட்டும் உலக சாதனையை பதிவு செய்து உள்ளது. கின்னஸ் உலக சாதனைகள் தங்கள் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் ஐந்து பெண் குழந்தைகள் மற்றும் நான்கு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுக்காத ஒரு பெண்ணைப் பற்றிய பதிவை வெளியிட்டது.

பதிவில் ஒன்பது குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் இருப்பதைக் காட்டும் வீடியோ இடம்பெற்றுள்ளது. மொராக்கோவில் உள்ள காசாபிளாங்காவில் உள்ள ஏய்ன் போர்ஜா மருத்துவமனையில் அந்த பெண் பிரசவம் ஆகி உள்ளார்.

ஹலிமா சிஸ்சே என்ற பெண்ணுக்கு 9 குழந்தைகள் பிறந்து உள்ளது. சிசேயின் கர்ப்பமாக இருந்த 30 வாரங்களில் மே 4, 2021 அன்று சிசேரியன் மூலம் பிரசவம் ஆகி உள்ளது.

குழந்தைகளின் பெயர் அடாமா, ஓமோவ், ஹவா, காதிதியா, பத்தூமா என்ற 5 பெண்குழந்தைகளும் ஓமர், எல்ஹாட்ஜி, பா மற்றும் முகமது என 4 ஆண் குழந்தைகளும் பிறந்து உள்ளது.

ஒவ்வொரு குழந்தையும் 0.5 – 1 கிலோ (1.1 – 2.2 எல்பி) வரை எடையுள்ளதாக இருந்தது. ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுக்கப் போவது குறித்து அந்த பெண்ணுக்கு கூட தெரியவில்லை.

மாலியில் உள்ள டாக்டர்கள் ஹலிமா ஏழு குழந்தைகளை பெற்றடுப்பார் என்று நம்பினர், அதனால் மாலி அரசாங்கம் அவரை மொராக்கோவில் உள்ள ஒரு சிறப்பு மருத்துவமனையில் சேர்த்தது.

ஆனால் ஹலிமாவுக்கு அங்கு 9 குழந்தைகள் பிறந்து உள்ளது. இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டு “ஆக்டோமோம்” என்ற புனைப்பெயர் கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த நாத்யா சுலேமானுக்கு எட்டு குழந்தைகள் பிறந்ததே சாதனையாக இருந்தது.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 916

    0

    0