அடுத்தடுத்து குறி வைக்கப்படும் பிரதமர்கள்… ஷின்சோ அபே கொலை போல பிரதமர் கிஷிடா மீது பைப் வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் உலக நாடுகள்!!
Author: Babu Lakshmanan15 April 2023, 12:37 pm
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பைப் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் வயாகமா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அந்நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடா உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களில் ஒருவர் பிரதமர் மீது பைப் வெடிகுண்டை வீசியுள்ளார்.
அதிக சத்தத்துடன் குண்டு வெடித்து புகை மூட்டம் சூழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பிரதமர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். பின்னர், அங்கு இருந்த பாதுகாவலர்கள் பிரதமர் புமியோ கிஷிடாவை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.
இதனிடையே, இந்த குண்டை வீசியவரை போலீசார் கைது செய்து விட்டதாக சொல்லப்படுகிறது. பிரதமர் மோடி ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த ஆண்டு பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதே பாணியில் தற்போது ஜப்பான் பிரதமர் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.