சுற்றுலா சென்ற இடத்தில் மனைவியுடன் தகராறு ; ஸ்க்ரூடிரைவரால் 41 முறை… ஓட்டலில் இருந்து தப்பிக்க முயன்ற கணவன் கைது..!!

Author: Babu Lakshmanan
16 November 2023, 2:44 pm

சுற்றுலா சென்ற இடத்தில் ஏற்பட்ட தகராறில் மனைவியை 41 முறை ஸ்குருடிரைவரால் குத்திக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு தம்பதி துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா சென்றிருந்தது. அப்போது, அங்கு ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அங்கு இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த கணவன், தனது மனைவியை ஸ்க்ரூடிரைவரால் 41 முறை குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

மனைவியின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த ஊழியர்கள் பார்த்த போது, ரத்த வெள்ளத்தில் பெண் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த கொலை தொடர்பாக துருக்கி போலீசார் விசாரணையைத் நடத்தி வந்தனர்.

இதனிடை ய, ரத்தக் கறையுடன் இருந்த டி-சர்ட்டை அணிந்தபடி ஓட்டலில் இருந்து தப்பிக்க முயன்ற கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். , விசாரணையில் அவர் தன் மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டார். தனக்கு உளவியல் பிரச்சனைகள் இருப்பதால் மருந்துகள் பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார். இந்தக் கொலை சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  • Rape with the actress in the shooting.. Attempt to commit suicide படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!