பார்வை போய்டுச்சு.. பார்க்க முடியல… பூச்சியால் கண் பார்வையை இழந்த நபரின் பரிதாப நிலை..!

Author: Vignesh
27 July 2024, 2:42 pm

சீனாவில், வு என்ற நபரின் முகத்தை பூச்சி ஒன்று சுற்றி வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், பூச்சியை தனது கன்னத்துக்கு அருகில் வரும்போது வேகமாக அடித்துள்ளார்.

பூச்சி இறந்துவிட்ட நிம்மதியில் இருந்த அவருக்கு, ஒரு மணி நேரம் கழித்து, இடது கண் சிவந்து, வீங்கி காணப்பட்டுள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இடது கண்ணின் நிலைமை மோசமடைந்ததால், இறுதியில் அவரின் இடது கண்ணை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

அவர் அடித்த பூச்சி Drain Fly எனவும், இது பெரும்பாலும் சாக்கடை இருக்கும் பகுதியில் அதிகம் காணப்படும் என்றும், பூச்சியை அடித்த போது ஏற்பட்ட அலர்ஜி காரணமாக அவரது இடது கண் பாதிக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 637

    0

    0