ஃப்ரிட்ஜ் பின்னால்10 வருடங்கள் மாட்டிக்கொண்ட நபர்: காணவில்லை விளம்பரம் இரங்கல் செய்தியாய் மாறியது எப்படி….?!!
Author: Sudha15 August 2024, 4:25 pm
10 வருடங்களாக குளிர்சாதனப் பெட்டிக்குப் பின்னால் மாட்டிக்கொண்ட மனிதனைப் பற்றி பொலிசார் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளனர்.லாரி எலி முரில்லோ-மொன்காடா என்ற இளைஞர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு 10 வருடங்களுக்கு பிறகு ஒரு ஃப்ரிட்ஜின் பின்னால் அவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
2009 இல் அவர் பணி செய்த நிறுவனத்தின் ஃப்ரிட்ஜ் ஒன்றின் பின்னால் சிக்கிக் கொண்டார். 2019 ஆம் ஆண்டில், அந்த கடை மூடப்பட்டது.இதனால் மூடப்பட்ட கடையில் இருந்து அலமாரிகள் மற்றும் உறைவிப்பான்களை தொழிலாளர்கள் குழு அகற்றியது .
அப்போது கடையில் உள்ள 25 அடி உயரமுள்ள ஃப்ரிட்ஜ் ஒன்றின் பின்னால் ஒரு மனித உடலைக் கண்டு திடுக்கிட்டனர். டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர்,அந்த உடல் 2009 இல் காணாமல் போன லாரி எலி முரில்லோ-மோன்காடா என்று கண்டறியப்பட்டது.இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவர் எப்படி சிக்கியிருப்பார் என வீடியோவும் வெளியிடப் பட்டுள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்கில் பணியாற்றிய டேனியல்சன் என்ற அதிகாரி “இது போன்றதொரு வழக்கை இதுவரை பார்த்ததில்லை என்றார்.