ஒலிம்பிக் கடைசி நாள்:பீதியில் ஆழ்த்திய இளைஞர்: போலீசார் கொடுத்த ஸ்பெஷல் கவனிப்பு…!!
Author: Sudha12 August 2024, 4:47 pm
ஒலிம்பிக் நிறைவு விழாவிற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஈபிள் கோபுரத்தில் ஏறியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டார், இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
உள்ளூர் நேரப்படி மதியம் 2:45 மணிக்கு அந்த நபர் கோபுரத்தில் ஏறுவதைக் கண்ட அதிகாரிகள் உடனடியாக அவரைக் கைது செய்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஒலிம்பிக் வளையங்களுக்கு சற்று மேலே ஒரு சட்டை அணியாத மனிதன் கயிறு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அவர் மேலே ஏறிச் சென்றதைக் கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அந்த நபரைக் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.இந்த மர்ம மனிதர் யார் என்னும் தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.
ஒலிம்பிக் தொடக்க விழா மற்றும் இறுதிப் போட்டியின் மையமாக ஈபிள் கோபுரம் இருந்தது, ஒலிம்பிக்கின் கடைசி நாளான நேற்று பாரிசின் ஈபிள் கோபுரத்தின் வடக்குப் பகுதியில் ஒருவர் ஏறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது…இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.