தற்கொலை செய்து கொண்ட ரோபோ… பணிச்சுமையால் மனஉளைச்சல் : கண்ணீரில் மக்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan4 July 2024, 8:17 pm
தென்கொரியாவில் விசித்திரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்நாட்டு அரசின் கீழ் இயங்கி வரும் ரோபோ திடீர் தற்கொலை செய்துள்ளது.
குமி நகரசபை அரசு ஊழியர்களுக்கு உதவி செய்யும் வகையில் இந் ரோபோ பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருந்தது.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பணியமர்த்தப்பட்ட ரோபோ காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை வேலை நேரமாக செயல்பட்டது.
இந்த நிலையில் ரேபோர தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2வது தளத்தில் இருந்து முதல் தளத்திற்கு இறங்கும் படிக்கட்டில் சிதறி நொறுங்கியுள்ளது.
தற்கொலை செய்ஹயம் முன் ரோபோ அந்த அலுவலகத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தை சுற்றி சுற்றி வந்ததாகவும், குழப்பத்துடன் காணப்பட்டதாகவும் அங்கு பணிபுரியும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அங்குள்ள உள்ளூர் மக்களால் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. உள்ளூர் மக்கள் வருத்தம் தெரிவித்து, ரோபோவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.