எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து : 41 பேர் பலி… மீட்பு பணி தீவிரம்!!
Author: Udayachandran RadhaKrishnan14 August 2022, 5:37 pm
கெய்ரோவின் இம்பாபாவில் உள்ள மக்கள் அதிகம் பேர் கூடியிருந்த தேவாலயத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
அதில் 41 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
முதல் கட்ட விசாரணையில், மின்சார கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. 15 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.