உக்ரைன் மீது தொடரும் ரஷ்யாவின் தாக்குதல்…பள்ளி கூடத்தின் வான்வெளி தாக்குதல்: 60 பேர் பலி என தகவல்..!!

Author: Rajesh
8 May 2022, 5:40 pm

கீவ்: உக்ரைனில் பள்ளி கூடத்தின் மீது ரஷ்ய ராணுவத்தினரால் நடந்த வெடிகுண்டுகள் தாக்குதலில் 60 பேர் வரை பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டுள்ள போரால் லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பலரும் போரில் கொல்லப்பட்டு உள்ளனர். அந்நாட்டின் பல நகரங்களில் உள்ள குடியிருப்புகள், கட்டிடங்கள் குண்டுவீச்சுகளால் சேதமடைந்து உள்ளன.

போரானது நீண்ட காலத்திற்கு தொடரும் என கூறப்படுகிறது. இதனால், சொந்த நாட்டிலேயே உக்ரைனியர்கள் அகதிகளாக வாழ கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த போரில் கிழக்கு உக்ரைனில் உள்ள லுகான்ஸ் பகுதியில் பிலோகோரிவ்கா கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றின் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இதில் அந்த பள்ளிக்கூடம் முற்றிலும் சேதமடைந்தது என லுகான்ஸ்க் கவர்னர் செர்கீ கைடாய் கூறியுள்ளார். வெடிகுண்டுகள் வீசப்பட்டபோது, அந்த பள்ளி கூடத்தில் மொத்தம் 90 பேர் இருந்துள்ளனர். அவர்களில் 27 பேர் காப்பாற்றப்பட்டு விட்டனர். பள்ளியில் இருந்த 60 பேர் உயிரிழந்திருக்க கூடும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

  • Jailor 2 cast and crew ஜெயிலர் 2-வில் சிவராஜ்குமாருக்கு பதில் இவரா…ஸ்கெட்ச் போட்டு தூக்கிய நெல்சன்..!