சுதந்திர தின அணிவகுப்பில் திடீர் துப்பாக்கிச்சூடு.. ரத்த வெள்ளத்தில் விழுந்த மக்கள்.. நாட்டையே உலுக்கிய சம்பவம்!!

Author: Babu Lakshmanan
5 July 2022, 8:58 am

அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் மர்ம நபர் நடத்தி துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் 246வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு இடங்களில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இல்லினாய்ஸ் மாகாணத்தில் சிகாகோ புறநகரில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியில் சுதந்திர தின அணிவகுப்பு நடைபெற்றது.

அணிவகுப்பு தொடங்கிய 10வது நிமிடத்தில் மர்மநபர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். தொடர்ந்து, 20க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கியால் அந்த நபர் சுட்டதில் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்களில், தற்போது வரை 6 பேர் உயிரிழந்தனர்.

ஒரு நபர் கையில் துப்பாக்கியுடன் உலா வரும் காட்சிகள் அமெரிக்க ஊடகங்களில், வெளியாகி பரபரப்பை கிளப்பின. துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் வயது 18 – 20 வரை இருக்கும் என்றும், அவர் ஒரு கட்டிடத்தில் நின்று கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்றும் இல்லினாய்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.

  • Sukumar cinema exit statement அல்லு அர்ஜூனால் சினிமாவை விட்டு விலகும் புஷ்பா பட இயக்குநர்.. திடீர் அறிவிப்பு!
  • Views: - 1538

    0

    0