அப்பா அரசியல்வாதி மகன் குற்றவாளி: 25 ஆண்டுகள் சிறை வாசம் வாரிசுக்கு நேர்ந்த துயரம்…!!

Author: Sudha
3 August 2024, 5:34 pm

ஜோ பைடன் அமெரிக்காவின் 46வது அதிபர் 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.2021 சனவரியில் இவர் 46-வது அதிபராகப் பொறுப்பேற்றார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் சட்ட விரோதமாக துப்பாக்கி வாங்கிய வழக்கில் நவம்பர் 13 ஆம் தேதி அதாவது தேர்தல் முடிந்து சரியாக ஒரு வாரம் கழித்து தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என அமெரிக்காவின் டெலாவர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு கைத் துப்பாக்கி வாங்கியது போதைப்பொருள் பயன்படுத்தியது உள்ளிட்ட மூன்று வழக்குகளில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என ஜூன் மாதம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மூன்று வழக்குகளிலும் மொத்தம் 25 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

அமெரிக்க அதிபரின் மகன் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறை செல்வது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் சொல்லப்படுகிறது.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?