அமெரிக்காவின் மறுபிரவேசம் தொடங்குகிறது : மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
16 November 2022, 10:09 am

வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட இருப்பதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

குடியரசுக்கட்சி சார்பில் இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். இந்த நிலையில், வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதாக அறிவித்து இருக்கிறார்.

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க மத்திய தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களையும் தாக்கல் செய்தார். தனது ஆதரவளர்கள் மத்தியில் உரையாற்றிய டொனால்டு டிரம்ப், அமெரிக்காவின் மறுபிரவேசம் தற்போதில் இருந்தே தொடங்குகிறது என்றார்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!