ஒரே நேரத்தில் இருநாடுகளில் பயங்கர நிலநடுக்கம்… தரைமட்டமான கட்டிடங்கள்… 100க்கும் மேற்பட்டோர் பலி!!

Author: Babu Lakshmanan
6 February 2023, 11:56 am

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டெப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. நுர்தாகி அருகே 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி – சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது.

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் லெபனான், ஜோர்டான், பிரிட்டன், ஈராக் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது. துருக்கியில் நிலநடுக்கம் காரணமாக எரிவாயு பைப்லைன் வெடித்து சிதறியதால் பதற்றம் ஏற்பட்டது. இதனிடையே, துருக்கியில் அவசர நிலையை பிரகடனம் செய்த அரசு, மீட்புப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

துருக்கியை தொடர்ந்து சிரியாவிலும் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். துருக்கி நிலநடுக்கத்தை தொடர்ந்து இத்தாலி சுனாமி பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 563

    0

    0