பின்வாங்கிய வாக்னர் குழு… பெலாரஸ் அதிபர் வேண்டுகோளால் தப்பியது ரஷ்யா..!!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2023, 12:13 pm

ரஷ்ய அதிபர் புதினின் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கோடு, மாஸ்கோவை நோக்கி படையெடுத்த வாக்னர் குழு, பெலாரஸ் அதிபரின் வேண்டுகோளால் பின்வாங்கியது.

பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுக்கஷென்கோவின் தலையீட்டால் இந்த பிரச்னை முடிவுக்கு வந்திருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. யெவ்ஜெனி ப்ரிகோஜினை 20 ஆண்டுகளுக்கும் மேலாக அறிந்தவர் என்பதால், லுக்கஷென்கோ சுமூக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டுள்ளார்.

ரஷ்ய அரசுக்கும் ப்ரிகோஜினுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின், பெலாரஸ் நாட்டுக்கு செல்லவுள்ளதாகவும் ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், வாக்னர் குழுவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும், ப்ரிகோஜின் மீதிருந்த குற்ற வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதாகவும் ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!