ஓடும் ரயில் திடீர் தீவிபத்து… 4 பெட்டிகளில் அடுத்தடுத்து பரவிய நெருப்பு… 5 பேர் உடல் கருகி பலி ; எதிர்கட்சியினர் மீது சந்தேகம்
Author: Babu Lakshmanan6 January 2024, 8:57 am
ஓடும் ரயில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி 5 பயணிகள் உயிரிழந்த சம்பவம் வங்கதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவை நோக்கி ஜேச்சோர் நகரில் இருந்து பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஓடும் ரயிலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் தீ வேகமாக பரவியது.
இதனால், உடனே ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகளும் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். இருப்பினும், 5 பயணிகள் இந்த தீவிபத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர். இந்த தீவிபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வங்கதேசத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வங்கதேச தேசியவாத கட்சி உள்பட முக்கிய எதிர்கட்சிகள் இந்தத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. எனவே, இந்த ரயில் தீவிபத்து எதிர்கட்சியினரின் சதிச்செயலாக இருக்குமோ..? என்று சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்கு எதிர்கட்சியினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.