நேதாஜி மகளுக்கு விருந்து உபசரிப்பு : இந்திய தூதரகம் சார்பாக ஜெர்மனியில் அனிதா போஸ்க்கு விருந்து!!

Author: Udayachandran RadhaKrishnan
23 January 2022, 6:04 pm

ஜெர்மனி : நேதாஜியின் 125வது பிறந்தநாளையொட்டி அவரது மகளுக்கு இந்திய தூதரகம் சார்பாக விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்க்கும் வியன்னாவை சேர்ந்த எமிலி ஷென்கிள் என்பவருக்கும் 1937ம் ஆண்டு வியன்னாவில் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 1942ம் ஆண்டு அனிதா போஸ் என்ற மகள் பிறந்தார்.

மனைவி மற்றும் மகளை ஐரோப்பியாவில் விட்டு விட்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் நடத்த தென்கிழக்கு ஆசியாவுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெர்மனியின் மார்ட்டின் பிஃபாப் என்னும் பேராசிரியரை மணந்து கொண்ட அனிதா போஸ்க்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேதாஜியின் 125வது பிறந்தநாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதை முன்னிட்டு ஜெர்மனியில் உள்ள அனிதா போஸ்க்கு இந்திய தூதரகம் சார்பாக விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

  • pa ranjith in the discussion of directing palwankar baloo biopic பிரபல கிரிக்கெட் வீரரின் பயோபிக்கை இயக்கும் பா.ரஞ்சித்? ஆச்சரிய தகவல்