‘எல்லாத்தையும் இழந்துட்டோமே’… மிகப்பெரிய துணிச்சந்தையில் பயங்கர தீவிபத்து : உதவிக்கு வந்த ராணுவம்.. கண்ணீர் விடும் வியாபாரிகள்..!!!

Author: Babu Lakshmanan
4 April 2023, 8:05 pm

வங்கதேசத்தில் மிகப்பெரிய துணிச்சந்தையில் நிகழ்ந்த தீவிபத்தில் லட்சக்கணக்கில் மதிப்புடைய துணிகள் எரிந்து நாசமாகின.

வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள பங்காபஜாரில் சுமார் 3000 கடைகளை கொண்ட மாபெரும் வணிக சந்தை செயல்பட்டு வருகிறது. தற்போது ரம்ஜான் பண்டிகை மாதம் என்பதால், துணிக்கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

மிகவும் நெருக்கலான தெருக்களைக் கொண்ட துணிச்சந்தையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது, அருகருகே இருந்த துணிக்கடைகளுக்கும் பரவியது. இதனால், கடைகளில் இருந்த துணிகள் அனைத்து எரிந்து சாம்பலானது.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலையில், ராணுவ வீரர்களின் உதவியுடம் நாடப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாத நிலையில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்பலாகின.

இதனிடையே, ஞகடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகி விட்டன. இனி என் குழந்தைகளை எப்படி காப்பாற்றுவேன்,” எனக் கூறி வியாபாரி ஒருவர் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி, பார்ப்போரின் நெஞ்சை உருக்கும் விதமாக இருந்தது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 625

    0

    0