அமெரிக்காவை வாட்டும் பனிப்புயல்: 3 அடி உயரத்திற்கு படர்ந்துள்ள பனிப்பொழிவு…பெரும்பாலான மாகாணங்களில் அவசர நிலை அமல்..!!

வாஷிங்டன்: கிழக்கு அமெரிக்காவில் உள்ள பல மாகாணங்களில் கடுமையான பனிப்புயலால் அவசர நிலை அறிவிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் வாஷிங்டன், பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் பலத்த காற்றுடன் இடைவிடாது பனி கொட்டி மக்களை உறைய வைத்து வருகிறது.

இதனால் வீடுகள், மரங்கள், வாகனங்கள் பனி மூடி வெள்ளை போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கின்றன. மேலும் சாலைகள் மற்றும் மேம்பாலங்களில் பனித்துகள்கள் குவிந்து கிடக்கின்றன.

இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது. கொட்டும் பனியை அகற்றும் பணியில் மக்களும், அரசும் ஈடுபட்டு வருகிறது. கடுமையான பனிப்புயலால் கிழக்கு அமெரிக்காவில் உள்ள பல மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு வருகிறது.

கடலோரப் பகுதிகளில் நாள் முடிவில் ஒரு அடி அளவில் மாசசூசெட்ஸின் சில பகுதிகளில் மூன்று அடிவரை பனிப் பொழிந்து வருகிறது. இதனால் 1,17,00க்கும் மேற்ப்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். நியூயார்க் மற்றும் அண்டை மாகாணமான நியூஜெர்சியில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மாகாண மக்களைக் கேட்டுக் கொண்டார். மேலும் கிழக்குக் கடற்கரையில் உள்ள நகரங்களில் வசிக்கும் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பனிப்படர்ந்த இடங்களில் இயந்திரங்கள் மூலம் பனி அகற்றப்பட்டு வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!

சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…

11 minutes ago

’இனி எந்த போராட்டமும் இல்லை’.. விஜயலட்சுமி வெளியிட்ட கடைசி வீடியோ!

சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…

46 minutes ago

மீனாட்சி செளத்ரிக்கு அரசாங்கம் அடித்த ஆர்டர்? உண்மை நிலவரம் என்ன?

நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…

1 hour ago

அமைச்சர் என் குடும்பத்தைப் பற்றி அப்படி பேசினார்.. மருத்துவரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி!

கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…

3 hours ago

கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!

விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…

3 hours ago

This website uses cookies.