உக்ரைன்-ரஷ்யா போர் ஒருபுறம்…ஏமனில் வெடிகுண்டு தாக்குதல் மறுபுறம்: அடுத்தடுத்த அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

Author: Rajesh
27 February 2022, 12:36 pm

ஏமன்: உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் குறித்து உலக நாடுகள் கவனம் செலுத்தி வரும் நிலையில், ஏமன் நாட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா, உக்ரைன் மீது நான்காவது நாளாக தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மக்கள் உயிர் பிழைப்பதற்காக தங்கள் நாடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். பலர் மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட சுரங்கப்பாதைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். உலகமே உக்ரைன்-ரஷ்யா மோதலை உற்றுநோக்கி வரும் நிலையில், ஏமன் நாட்டில் உள்ள சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது சவூதி வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏமன் நாட்டின் சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது சவூதி, ஐக்கிய அரபு அமீரக நாடுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், போர் விமானங்கள் மூலம் ஏமன் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையே போர் நடந்துவரும் சூழலில் ஏமன் நாட்டில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஏமன் உள்நாட்டு போரில், அந்நாட்டின் ராணுவ கிளர்ச்சிக்கு எதிராக சவூதி போரில் ஈடுபட்டு வரும் நிலையில், போர் விமானங்கள் மூலம் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 2139

    0

    0