BTS ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி: 2k கிட்ஸ் அபிமான “சுகா” கைதாவாரா?: அதிரடி ஆக்ஷனில் இறங்கிய தென்கொரிய காவல்துறை…!!

Author: Sudha
15 August 2024, 11:27 am

2k கிட்ஸ் மத்தியில் உலகம் முழுவதும் பிரபலமானவர்கள் BTS இசைக்குழு. 7 பேர் கொண்ட இந்த குழுவினர் யூடியூப் இல் வெளியிடும் வீடியோக்கள் மூலம் வெறித்தனமான பல ரசிகர்களை பெற்றுள்ளனர்.இந்த குழுவில் ஒருவர் சுகா..தென்கொரியாவின் சியோலில் உள்ள பிரபல வணிக நகரமான ஹன்னம்-டாங்கில் உள்ள ஒரு தெருவில் பிடிஎஸ் குழுவில் ஒருவரான சுகா கடந்த 26ஆம் தேதி விழுந்து கிடந்தார்.

அதனைப் பார்த்த அங்கிருந்த போலீசார் அவருக்கு உதவ முயன்றுள்ளனர். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததை அறிந்தனர். பின்னர் அவர் மது அருந்தியுள்ளரா என்பதை அறிவதற்கு ப்ரீத் அனலைசர் சோதனையும் மேற்கொண்டுள்ளனர்.அப்போது அவர் அளவுக்கதிகமான குடித்திருப்பது தெரியவந்துள்ளது. அவர் இரத்தத்தில் மது அளவு 0.227 % இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது தனக்கு கால் வலி எனவும் இதன் காரணமாகத்தான் கிக்போர்டு உள்ள ஸ்கூட்டரை ஓட்ட ஒரு பீர் மட்டும் அருந்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் விசாரணையில் சுகா ஓட்டியது எலெக்ட்ரிக் கிக்போர்டு அல்ல, இருக்கையுடன் கூடிய மின்சார ஸ்கூட்டர் அது பைக்குக்கு சமமான கொரிய ஸ்கூட்டர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் வழக்கு இன்னும் தீவிரமடைந்துள்ளது.

தென்கொரியாவில் குடிபோதையில் ஸ்கூட்டர் ஓட்டினால் ஒன்று முதல் இரண்டு முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் தோராயமாக 3 முதல் 800 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.அதாவது இந்திய மதிப்பில் 12.38 லட்சம் ரூபாய்.

சுகாவின் இந்த செயலுக்கு BTS-ன் பிரதி நிறுவனமான பிக்ஹிட் மியூசிக் மன்னிப்புக் கோரியது.பலர் சுகாவின் இந்த செயலுக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் பிடிஎஸ்-குழுவிலிருந்து சுகாவை நீக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இந்நிலையில் காவல்துறை இந்த வழக்கை தவறாக கையாண்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.சுகா வின் வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

  • Director Mysskin controversial speech நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?…மிஸ்கினை காரி துப்பிய பிரபல நடிகர்…!