இலங்கை, பாகிஸ்தானை தொடர்ந்து ஆட்டம் காணும் சீனா : அதிபர் ஜின்பிங் வீட்டுக்காவலில் வைப்பு..? ஆட்சியை கைப்பற்றியதா ராணுவம்?
Author: Babu Lakshmanan24 September 2022, 6:36 pm
சீனா அதிபர் ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றி விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பிய சீன அதிபர் ஜி ஜின்பிங், விமான நிலையத்தில் வைத்தே கைது செய்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. சீன ராணுவ தலைவர் பதவியிலிருந்து ஜி ஜின்பிங் நீக்கப்பட்டதாகவும், பெய்ஜிங்கை நோக்கி ராணுவ வாகனங்கள் செல்வதாகவும் சமூகவலைதளங்களில் தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.
சீனாவில் கிட்டத்தட்ட 60% விமானங்கள் எந்த அறிவிப்பும் இல்லாமல் நேற்று தரையிறக்கப்பட்டதாக அறிக்கைகள் வெளியாகியிருப்பது இந்தத் தகவலை உறுதி செய்யும் விதமாகவே இருந்து வருகிறது.
அதுமட்டுமில்லாமல், தற்போது அமெரிக்காவில் வசிக்கும் சீன மனித உரிமை ஆர்வலர் ஜெனிபர் ஜெங், சீன ராணூவம் பெய்ஜிங்கை நோக்கி நகர்வதாகக் கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சீனாவில் நடக்கும் விவகாரங்கள் குறித்து இன்னும் உறுதியான தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், உலக நாடுகளிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.