அமெரிக்காவில் கோவை மாணவி திடீர் கைது… பல்கலை.,யில் நுழையவும் தடை விதித்து அதிரடி..!!

Author: Babu Lakshmanan
27 April 2024, 10:36 am

அமெரிக்காவில் படித்து வரும் கோவையைச் சேர்ந்த மாணவி போலீசாரால் திடீரென கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினரிடையே, கடந்த 150 நாட்களுக்கும் மேலாக போர்நடந்து வருகிறது. இந்தப் போரில் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தப் போரினால் லட்சக்கணக்கான மக்கள் உடமைகளை இழந்து

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 150 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இப்போரில் இதுவரை 34,356 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 77,368க்கும் மேற்பட்டோட் காயமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க: வடமாநில ஓட்டு வேட்டையில் குதிக்கும் CM ஸ்டாலின்?… இண்டி கூட்டணிக்கு கை கொடுக்குமா?…

திடீர் போரினால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்ததுடன், காஸா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தியது. காஸா பகுதியின் 2வது மிகப்பெரிய நகரமான கான் யூனிஸை விட்டு இஸ்ரேல் ராணுவம் வெளியேறியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் ஃபாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி மாணவி அச்சிந்தியா சிவலிங்கன் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாணவி அச்சிந்தியா சிவலிங்கனுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த கோயம்புத்தூர் சொந்த ஊர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பல்கலைகழத்தில் நுழையவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1698

    0

    0