Amazon பார்சலில் வந்த பல்லி.. ஏர் பிரையர் ஆர்டர் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

Author: Vignesh
27 July 2024, 1:26 pm

கொலம்பியாவை சேர்ந்த சோபியா செரானோ என்ற பெண் அமேசானில் இருந்து தனது வீட்டிற்கு ஏர் பிரையர் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அந்த ஆர்டர் வீட்டுக்கு வந்தது. அதை திறந்து பார்த்தபோது அதில் ஒரு பல்லி இருந்தது.

அதை பார்த்த சோபியா செரானோ அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் தனது அனுபவத்தை சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடம் பகிர்ந்து கொண்டார். பேக்கேஜில் இருந்த பல்லியின் படத்தை தனது வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இதுவரை 4.1 மில்லியன் அதனை பார்வையிட்டுள்ளனர்.

இது கொரியர் இன் தவறா அல்லது அமேசானின் தவறா என தனக்கு தெரியவில்லை என்ற தலைப்புடன் அவர் பதிவிட்டு இருந்தார். காணப்பட்ட பல்லி ஸ்பானிஷ் பாறை பல்லி என்று அறியப்படுகிறது. இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து, பல அமேசான் யூசர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Arya and Santhanam reunion வைரலாகும் NEXT LEVEL போஸ்டர்:10 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ஆர்யா- சந்தானம்…எந்த படம்னு தெரியுமா..!