உச்சத்தை தொட்ட கொரோனா.. ஒரே நாளில் 23 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி : சிக்கித் தவிக்கும் சீனா!!

Author: Udayachandran RadhaKrishnan
17 November 2022, 10:02 pm

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது.

கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன.

இந்த நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அங்கு 20,199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இது கடந்த பல மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிக பாதிப்பு எண்ணிக்கை ஆகும். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 23,276 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 20,888 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது. மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,79,431 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 1434

    0

    0