தமிழக மீனவர்களுக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல்…! கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு…

Author: kavin kumar
27 February 2022, 8:54 pm

எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 8 பேருக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகையும் அதிலிருந்து 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து கிளிநொச்சி கிராஞ்சி கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டது.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து விசாரணைக்கு பின் மீனவர்களை கிளிநொச்சி நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பின்னர் கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், தமிழக மீனவர்கள் 8 பேருக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழக மீனவர்கள் 8 பேரையும் மார்ச் 11-ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

  • a scene leaked in internet from thug life movie என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?