நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை கொல்ல முயற்சி… விஷம் கலந்த உணவு கொடுத்ததாக தகவல்… பாகிஸ்தானில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
18 December 2023, 12:41 pm

இந்திய போலீசாரால் தேடப்படும் குற்றவாளியும், நிழல் உலக தாதாவுமான தாவூத் இப்ராஹிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1993ம் ஆண்டு நிகழ்ந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ளார். தற்போது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அனுமதிக்கப்பட்டுள்ள தளத்தில் வேறு எந்த நோயாளியையும் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தாவூத்தின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அந்த தளத்திற்கு செல்ல முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தாவூத் இப்ராகிமுக்கு விஷம் கலந்த உணவு கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1336

    0

    0