லண்டன் பக்கிங்காம் கால்வாயில் கோவை மாணவனின் சடலம்.. விசாரணையில் திக்..திக்… அதிர்ச்சி சம்பவம்!!

கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் சிவகுமார் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன்கள் ஜீவந்த், ரோகன்.

மூத்த மகன் ஜீவந்த்க்கு 25 வயதாகிறது. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பி.இ எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படித்து முடித்தார்.

பிஇ படித்த ஜீவந்த் இங்கிலாந்து சென்று அங்கு உள்ள புகழ் பெற்ற ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பினார். அங்கு எம்.எஸ்.சி. இன்டர்நேஷனல் பிசினஸ் படிக்க விண்ணப்பித்தவருக்கு இடமும் கிடைத்தது.

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜீவந்த் தனது ஒரு வருட படிப்பிற்காக இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகருக்கு சென்றார். அங்கு பல்கலைக்கழக விடுதியிலேயே தங்கி படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி மாலை 6.30 மணியளவில் ஜீவந்த் பல்கலைக்கழகம் அருகே உள்ள நூலகத்திற்கு போய் இருக்கிறார். அங்கு புத்தகங்களை படித்துவிட்டு, பாடங்களுக்கான நோட்சும் எடுத்துள்ளார்.
இந்நிலையில் ஜீவந்த்தை கடந்த 20ம் தேதி இரவு 9.30மணி அளவில் அவரது நண்பர்கள் போன் செய்து சாப்பிட அழைத்துள்ளனர். அவர்களிடம் ஜீவந்த், நான் சாப்பிட சிறிது நேரம் கழிச்சு வருகிறேன். நீங்கள் போய் சாப்பிடுங்கள் என கூறினாராம்.

இதையடுத்து அவர்களும் சாப்பிட சென்றுவிட்டு மீண்டும் விடுதிக்கு வந்துவிட்டனர். ஆனால் இரவு 11 மணி மேல் ஆன பின்னரும் மாணவர் ஜீவந்த் பல்கலைக்கழக விடுதிக்கு வரவில்லை. இதனால் அவருடன் தங்கியிருந்த நண்பர்கள் அவரை மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டார்கள்.
அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் பயந்து போன நண்பர்கள் இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகமும் மாணவர் ஜீவந்த் காணாமல் போனது தொடர்பாக வெஸ்ட் மிட்லண்ட்ஸ் போலீசாருக்கு தெரியப்படுத்தினர்.
போலீசார் மாயமான ஜீவந்த்தை தீவிரமாக தேடி வந்தனர்.இந்த நிலையில் 21-ந் தேதி அதிகாலை 4.30 மணி அளவில் வெஸ்ட் மிட்லண்ட்ஸ் போலீசுக்கு பர்மிங்காம் கால்வாயில் வாலிபர் ஒருவர் தண்ணீரில் அடித்து வரப்பட்டுள்ளதாகவும், மயங்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

அந்த தகவலின் பேரில் போலீசார், ஆம்புலன்ஸ் மருத்துவ உதவி குழுவினருடன் சம்பவ இடத்திற்கு சென்றார்கள். பின்னர் அங்கு உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து, அவர் யார் என விசாரித்தார்கள்.

விசாரணையில், காணாமல் போன ஜீவந்த் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி ஜீவந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த தகவல் பல்கலைக்கழகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. பல்கலைக்கழக நிர்வாகம் கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள ஜீவந்த்தின் பெற்றோருக்கு தகவல் தந்தனர். இதனை கேட்டதும் அவரது பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து போய் கதறி அழுதனர்.

லண்டனுக்கு படிக்க போன இளைஞர் உயிரிழந்த தகவல் கேட்டு பெரிய நாயக்கம்பாளையத்தில் உள்ள ஜீவந்தின் நண்பர்கள் உறவினர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

இதனிடையே லண்டனில் உள்ள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். நூலகத்திற்கு படிக்க செல்வதாக கூறிய ஜீவந்த் எப்படி பர்மிங்காம் கால்வாயில் அடிபட்ட நிலையில் கிடந்தார் என்பது மர்மமாக உள்ளது. எப்படி உயிரிழந்தார். அவரை யாராவது அடித்து கால்வாயில் வீசினார்களா, அல்லது வேறு காரணமாக என்பதை விசாரித்து வருகிறார்கள்.

இதனிடையே இந்திய தூதரகம் மூலம் இறந்த ஜீவந்தின் உடலை மீட்பதற்கான பணியை அவரது குடும்பத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள். இந்திய தூதரகம் ஜீவந்த் குடும்பத்தினரிடம் தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Updatenews Udayachandran

Recent Posts

பிரபுதேவாவால் பெண்டு கழண்டுப்போன டான்சர்கள்- இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான ஆளா இவரு?

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் பிரபுதேவா, மிகப் பிரபலமான நடிகர் மட்டுமல்லாது மிகச் சிறந்த…

18 seconds ago

என்னைய இப்படி காமிச்சிருக்கியேடா- ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் சொன்ன GBU விமர்சனம்?

ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…

52 minutes ago

தல சுற்ற வைக்கும் GBU முதல் நாள் வசூல் வேட்டை… எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?

அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…

1 hour ago

அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்ததரவு!

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

2 hours ago

திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு… கொந்தளித்த கனிமொழி எம்பி : என்ன நடந்தது?

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

2 hours ago

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

15 hours ago

This website uses cookies.