உச்சமடையும் உக்ரைன் போர்: ராணுவ தளத்தின் மீதான ரஷ்ய தாக்குதல் முறியடிப்பு…உக்ரைன் அரசு தகவல்..!!

Author: Rajesh
26 February 2022, 9:29 am

கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 3வது நாளாக நீடித்து வரும் நிலையில், கீவ்வில் உக்ரைன் ராணுவ தளத்தின் மீதான ரஷிய முறியடிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 3வது நாளாக நீடித்து வருகிறது. தலைநகர் கீவை நோக்கி முன்னேறியுள்ள ரஷ்ய படையினரால் உக்ரைன் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இந்த தாக்குதலை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ரஷ்யாவை வலியுறுத்தி வருகின்றன.

எனினும், உக்ரைன் மீது முழு வீச்சில் ரஷ்யா தாக்குதலை அரங்கேற்றி வருகின்றது. இந்த நிலையில், தலைநகர் கீவ்வில் உக்ரைன் ராணுவ தளத்தின் மீதான ரஷ்ய முறியடிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உக்ரைனின் எல்லை வழியாக அங்கு சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைன் மக்களும் அண்டை நாடுகளில் தஞ்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!