நித்தியானந்தாவுக்கு தீபாவளி விருந்து? சர்ச்சையில் சிக்கிய எம்பிக்கள் : குஷியில் கைலாசா..?!!

Author: Udayachandran RadhaKrishnan
13 December 2022, 10:50 am

சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடிய நிலையில், கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வந்த அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை பாதிப்பு என்று தகவல்கள் வெளியானது.

ஆனாலும் அவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தீபாவளியின்போது லண்டனில் இங்கிலாந்து எம்.பி.க்கள் 2 பேர் நித்யானந்தாவை விருந்துக்கு அழைத்ததாக இங்கிலாந்து ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஹவுஸ் ஆப் லாட்சில் உள்ள சோல்மண்டேலியில் இந்து போரம் ஆப் பிரிட்டன் என்ற அமைப்பு சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதில் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி. பாப் பிளாக்மேன் மற்றும் ஹவுஸ் ஆப் லார்ட்ஸ் உறுப்பினர் ராமி ரேஞ்சர் ஆகியோருடன் நித்யானந்தா சார்பில் அவரது பிரதிநிதியான நித்ய ஆத்மயானந்தா பங்கேற்றதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் வழக்கில் தேடப்படும் ஒருவரை விருந்துக்கு அழைத்ததற்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் சில மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நித்யானந்தா மற்றும் அவரது அமைப்பை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இந்து போரம் ஆப் பிரிட்டன் அமைப்பு நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு மட்டும் உதவினேன் என ராமி ரேஞ்சர் கூறி உள்ளார்.

இதற்கிடையே இங்கிலாந்தை சேர்ந்த நித்யானந்தாவின் வழக்கறிஞர் ரிச்சர்ட் ரோஜர்ஸ் இந்த சம்பவத்தை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆதாரமற்ற வகையில் நித்யானந்தா குறித்து இவ்வாறு செய்தி வெளியாகி உள்ளது. அவரை குறித்து இதுபோன்ற தகவல்கள் பரப்பப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ