பிரிட்டனில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வம்சாவளி : வரலாற்றில் திருப்புமுனையாக பார்க்கப்படும் பிரதமரின் தேர்வு…!!
Author: Udayachandran RadhaKrishnan8 July 2022, 4:16 pm
காலியாக உள்ள இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு முன்னாள் நிதியமைச்சரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் போட்டி என தகவல் வெளியாகியுள்ளது.
தன் கட்சியை சேர்ந்த அமைச்சர்களே தனக்கு எதிராக இருந்த காரணத்தால், தனது ஆதரவை பிரிட்டனில் இழந்த காரணத்தால் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவி மற்றும் தனது கட்சி பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து அந்த பதவிகளுக்கு தற்போது காலி இடம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. அதில் போரிஸ் ஜான்சனை எதிர்த்து தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்-வும் உள்ளார்.
அதே போல, லிஸ் ட்ரஸ், பென் வாலஸ், ஜெர்மி ஹன்ட் எனும் முன்னாள் அமைச்சர்களும் இந்த இங்கிலாந்து பிரதமர் போட்டியில் இருப்பதால் போட்டி மிக மிக கடுமையாக இருக்கும் என்கிறது இங்கிலாந்து செய்தி வட்டாரம்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்.. இன்போசிஸ் நிறுவனத்தின் உரிமையாளரின நாராயண மூர்த்தியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை பிரிட்டன் பிரதமராக ரிஷி தேர்வானால் வரலாற்றில் முதன்முறையாக் பிரிட்டனை ஆளும் இந்திய வம்சாவளி என்ற பெருமையை அடைவார்.