‘என் பிரைவேட் ஜெட்டை டிராக் செய்ய வேண்டாம்’…இளைஞருக்கு எலன் மஸ்க் கொடுத்த மெகா ஆஃபர்: நிராகரித்த ஜாக் ஸ்வீனி…காரணம் தெரியுமா?

Author: Rajesh
6 February 2022, 6:37 pm

தொழில்நுட்ப உலகில் தனி சாம்ராஜ்யம் அமைத்துள்ளவர் எலான் மஸ்க். உலகின் முன்னணி பணக்காரரான அவரது தனி விமானம் எங்கெல்லாம் செல்கிறது என்ற விவரத்தை லைவாக @ElonJet என்ற ட்விட்டர் கணக்கில் பதிவிட்டு வருகிறார்.

19 வயதான இளைஞர் ஜாக் ஸ்வீனி. இதற்கென ட்விட்டர் பாட்டை வடிவமைத்துள்ளார் அவர். இந்நிலையில் அந்த கணக்கை நீக்கவும், அதனை நிறுத்தவும் மஸ்க் தரப்பிலிருந்து சில ஆஃபர்கள் கொடுக்கப்பட்டன.

அதற்காக முதலில் ஸ்வீனிக்கு 5000 அமெரிக்க டாலர்கள் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் அதை நிராகரித்துவிட்டார். மேலும் அதனை செய்ய தனக்கு புதிய டெஸ்லா கார் வேண்டும் என சொல்லியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு 3 ஆண்டுகள் சந்தாவில் டெஸ்லா மாடல் 3 கார் கொடுப்பதாக மஸ்க் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஸ்வீனி அதனை நிராகரித்துள்ளதாக தெரிகிறது. மேலும் தனக்கு சொந்தமாக புதிய டெஸ்லா கார் வேண்டுமென அவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மஸ்க் தரப்பில் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கப்படாமல் உள்ளது. எலன் மஸ்க்கின் ஆஃபர்களை மறுக்கும் இளைஞர் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளார்.

  • Jayam Ravi personal statement படம் தோல்விக்கு நான் தான் காரணமா…ரசிகர்களுக்கு அன்பு கட்டளை விடுத்த ஜெயம் ரவி..!