இங்கிலாந்து மகாராணி எலிசபெத் உடல்நிலை கவலைக்கிடம் : மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு.. கவலையில் பக்கிங்ஹாம் அரண்மனை!!

Author: Udayachandran RadhaKrishnan
8 September 2022, 7:22 pm

மகாராணியின் அதிகாரப்பூர்வன மருத்துவக்குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இங்கிலாந்து மகாராணியாக ராணி எலிசெபத். இங்கிலாந்து நாட்டில் உள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வருகிறார். இவருக்கு தற்போது 96 வயதாகிறது.

இவருக்கு திடீரென இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வன மருத்துவக்குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

வேல்ஸ் இளவரசர், கமிலா மற்றும் கேம்பிரிட்ஜ் பிரபு ஆகியோர் 96 வயதான ராணியுடன் உள்ளனர். இங்கிலாந்து மகாராணி எலிசெபத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது இங்கிலாந்து நாட்டினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் விரைவில் நலம் பெற வேண்டிய உலகத்தலைவர்கள் பிரார்த்தனை தெரிவிப்பதாக கூறியுள்ளனர். ராணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் உடல் நலம் பாதிக்கப்பட்டு, நடக்கவும் நிற்கவும் சிரமப்பட்டார்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 1544

    0

    0