ஐடி ஊழியர்களே உஷார்… 12 ஆயிரம் ஊழியர்களுக்கு குட்பை சொன்ன பிரபல நிறுவனம் : பணிநீக்க நடவடிக்கையில் நிறுவனங்கள்!!

Author: Babu Lakshmanan
20 January 2023, 6:41 pm

12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா, உக்ரைன் – ரஷ்யா போர், அரசியல் நிலைத்தன்மை உள்பட பல்வேறு காரணங்களால் உலக பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனிடையே, 2023-ம் ஆண்டில் 3-ல் 1 பங்கு உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கும் என்று ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா இந்த ஆண்டு தொடக்கத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, பிரபல ஐடி நிறுவனங்கள் உள்பட பெரு நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன. அந்த வகையில், 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதேபோல, கோல்ட்மென் சச்ஸ் என்னும் பிரபல நிதி சேவை நிறுவனம் 3 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து விடுவிக்கிறது.

அமேசான் நிறுவனமும் தங்கள் பங்குக்கு ணிசமான அளவிலான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகிறது.

இந்த நிலையில், கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமும் தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் முடிவில் இறங்கியுள்ளது. கூகுள் தாய் நிறுவனமான ஆல்பாபெட் 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் பணிபுரியும் ஊழியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவதாகவும் ஆல்பாபெட் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, பிரபல முன்னணி ஐடி நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 620

    0

    0