ரஷ்யாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு…உக்ரைனுக்கு பெருகும் ஆதரவு: ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க தடை விதிக்கும் உலக நாடுகள்..!!

Author: Rajesh
27 February 2022, 5:28 pm

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில் ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க பின்லாந்து மற்றும் பெல்ஜியம் தடைவிதித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதல் நடத்தி உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. உக்ரைன் மீதான தாக்குதலை கைவிட பல்வேறு நாடுகள் ரஷியாவை வலியுறுத்து வருகின்றன.

உக்ரைனின் அண்டை நாடுகளான எஸ்டோனியா, லாட்வியா, போலந்து, செக் குடியரசு, பல்கேரியா ஆகிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷ்யாவின் விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்த தடை விதித்துள்ளன.
மாஸ்கோவும் பதிலுக்கு அந்த நாடுகளின் விமானங்கள் தங்கள் எல்லையின் மேல் பறக்க தடை விதித்துள்ளது. இந்நிலையில் தற்போது பின்லாந்தும், பெல்ஜியம் நாடும் ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்பரப்பில் பறக்க தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், பின்லாந்து உக்ரைனுக்கு ஆதரவாக குண்டு துளைக்காத ஆடைகள், தலைக்கவசங்கள், நடமாடும் மருத்துவமனைகள் ஆகியவற்றை அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைனுக்கு சுமார் 40 பீரங்கிகளை அனுப்பவும் முடிவு செய்துள்ளது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!