அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது?.. அடித்து இழுத்து சென்ற போலீஸ்? பரபரப்பு… பதற்றம்!

Author: Udayachandran RadhaKrishnan
23 March 2023, 1:18 pm

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு ட்ரம்ப் 2024ல் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் வெற்றி பெற பல மாகாணங்களில் தற்போதில் இருந்தே அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகிறார்.

கடந்த 2016ம் ஆண்டில் இதேபோல ட்ரம்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் என்பவர் ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் ஆபாச பட நடிகையின் வழக்கை வாபஸ் பெற 1.30 லட்சம் அமெரிக்க டாலர் அளித்ததாகவும், அது பிரச்சார நிதி பணம் எனவும் கூறப்படுகிறது.

இந்த சர்ச்சை விவகாரத்தில் ட்ரம்ப்பை போலீஸ் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ட்ரம்ப்பை அமெரிக்க போலீஸ் வலுக்கட்டாயமாக அழைத்து அடித்து இழுத்து கைது செய்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவரை சிறையில் அடைப்பது போன்ற புகைப்படங்களும் வெளியான நிலையில் இது உண்மை அல்ல என்றும், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!