அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது… கைதான சில மணி நேரங்களில் சிறையில் நடந்த சம்பவம்!!
Author: Udayachandran RadhaKrishnan25 August 2023, 9:07 am
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது… கைதான சில மணி நேரங்களில் சிறையி நடந்த சம்பவம்!!
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜார்ஜியா மாகாணத்தில் 2020ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளை முறைகேடாக மாற்ற முயன்றதாக டிரம்ப் உள்ளிட்ட 18 பேர் மீது மோசடி வழக்கு பதியப்பட்டது. வழக்கு விசாரணை ஜார்ஜியாவின் அட்லாண்டா கோர்ட்டில் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், 19 பேரிடமும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு செய்தது. அதன்படி, டிரம்ப் உள்பட வழக்கில் தொடர்புடைய 19 பேருக்கும் கைது வாரண்டு பிறப்பித்து வருகிற 25-ந் தேதிக்குள் தாமாக முன்வந்து ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று இரவு, 7 மணியளவில் ஜார்ஜியா வழக்கு தொடர்பாக அட்லாண்டா சிறையில் சரணடைந்தார். பலத்த பாதுகாப்புடன் சிறையில் சரணடைந்த அவருக்கு, சிறை அதிகாரிகள் அவரது அடையாளங்களை குறித்தனர்.
அதன்படி, டிரம்பின் உயரம் ஆறு அடி மூன்று அங்குலம் (1.9 மீட்டர்), அவரது எடை 215 பவுண்டுகள் (97 கிலோகிராம்) மற்றும் அவரது முடி நிறம் “ப்ளாண்ட் அல்லது ஸ்ட்ராபெர்ரி” என சிறைச்சாலையால் பட்டியலிடப்பட்டுள்ளது.
30 நிமிடங்களுக்கும் குறைவான அமர்வின் போது, ட்ரம்ப் மீது அட்லாண்டாவின் ஃபுல்டன் கவுண்டி சிறையில் 13 குற்றச்சாட்டுகளில் பதிவு செய்யப்பட்டார். அதன்பின் 2 லட்சம் அமெரிக்க டாலர் பிணையாக செலுத்திய பின், விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்டதும், உடனடியாக விமானம் மூலம் நியூஜெர்சி புறப்பட்டார்.