தாறுமாறாக எகிறிய பெட்ரோல், டீசல் விலை… ரூ.300ஐ நெருங்குவதால் மக்கள் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
17 March 2023, 3:42 pm

பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டு அரசின் நிதிப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், Platts Singapore என்ற கச்சா எண்ணெய் விலை நிர்ணய அமைப்பு விலையை உயர்த்தியுள்ளது.

அதேவேளை, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது. எனவே, பெட்ரோலியம், எண்ணெய் மற்றும் லூப்பிரகன்ட் ஆகிய பொருள்களின் விலை நமது நாட்டில் உயர்ந்துள்ளது.

இதையடுத்து அங்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை லிட்டருக்கு ரூ.13 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை உயர்வை தொடர்ந்து, பெட்ரோல் ஒரு லிட்டர் அந்நாட்டு நாணய மதிப்பில் ரூ.272ஆக உயர்ந்து விற்பனையாகிறது.

இதே போன்று ஒரு லிட்டர் டீசலின் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில், ரூ.293 ஆக உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் மட்டுமின்றி மண்ணெண்ணெய் விலையும் லிட்டருக்கு ரூ.2.56 ரூபாய் அதிகரித்து ஒரு லிட்டர் அந்நாட்டு மதிப்பில் 190.29 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

அமெரிக்கா டாலருக்கு நிகரான பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்த நிலையில் அந்நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பும் மிக மோசமாக குறைந்துள்ளது.

இதுவே, எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது. வரலாறு காணாத வகையில் எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.300ஐ நெருங்கியது பாகிஸ்தான் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 731

    0

    0