மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்த கோத்தபய ராஜபக்சே : அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக சபாநாயகருக்கு கடிதம்!!

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அந்த நாட்டின் 2 கோடியே 20 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. மக்கள் போராட்டம் அன்னியச்செலாவணி இல்லாமை, விஷம்போல நாளும் ஏறிவரும் விலைவாசி, எரிபொருட்கள் தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு என பிரச்சினைகள் வரிசை கட்டி நிற்க, இனியும் பொறுப்பதற்கு இல்லை என்ற நிலையில் இலங்கை மக்கள் வெகுண்டெழுந்தனர். அவர்கள் வீதிகளில் இறங்கி போராடத்தொடங்கினர்.

அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக கோரி அதிபர் மாளிகையில் நுழைந்து போராட்டம் நடத்தினர். இதனால் அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே தப்பியோடினார். இதையடுத்து பிரதமர் வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, இடைக்கால அதிபராக செய்லபடுவார் என சபாநாயகர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவசர பிரகனடம் பிறப்பிக்கப்பட்டது.

இருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து அதிபர் பதவியில் இருந்து கோத்தபயாவை ராஜினாமா செய்ய வலியுறுத்தினர். நேற்று ராஜினாமா அறிவிப்பார் என எதிர்பார்த்த நிலையில் அந்த அறிவிப்பை அவர் வெளியிடாமலே இருந்தார்.

இந்த நிலையில் இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று தனது பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை சபாநாயகருக்கு கோத்தபய அனுப்பி உள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தூக்கம் தொலைத்த செந்தில் பாலாஜி.. மூத்த அமைச்சர் வழியில் டெல்லி விசிட்.. பரபரக்கும் களம்!

டாஸ்மாக் முறைகேடு குற்றச்சாட்டு உள்ள நிலையில், நேற்று மாலை டெல்லி சென்று இன்று அதிகாலையே சென்னை திரும்பியிருக்கிறார் அமைச்சர் செந்தில்…

22 minutes ago

வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 19) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 40 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 290…

1 hour ago

ரூ.1000 கோடி ஊழல் என சொல்வதற்கு பாஜகவினருக்கு தகுதி இல்லை : திமுக கூட்டணி எம்எல்ஏ விமர்சனம்!

செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மேற்கு தாம்பரத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் இப்தார்…

1 hour ago

ஜனநாயகன் படத்தில் பல சுவாரஸ்யம் இருக்கு… மமிதா பைஜூ உடைத்த ரகசியம்..!!

தளபதி விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.…

2 hours ago

OTT-யில் ‘டிராகன்’..அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

டிராகன் படத்தின் OTT வெளியீடு தமிழ் திரைப்பட உலகில் நடிகராகவும்,இயக்குநராகவும் தற்போது கலக்கி வரும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான…

14 hours ago

‘குணா’ படம் என்னுடைய படம்…கோவையில் மலையாள இயக்குனர் பர பர பேட்டி.!

குணா திரைப்படம் குறித்து சிபி மலையில் விளக்கம் பிரபல மலையில் இயக்குநர் சிபி மலயாழ்,குணா படத்தை முதலில் தான் இயக்கவிருந்ததாக…

16 hours ago

This website uses cookies.