மனிதராக பிறந்த அனைவருக்குமே தன் வாழ்நாளில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். அது சாதாரணமான விஷயமோ இல்லை, அசாதாரண விஷயமோ அந்த விஷயத்தை செய்தாக வேண்டும் என்கிற இலட்சியமாக கூட இருக்கலாம்.
அந்த வகையில் இளைஞர் ஒருவருக்கு அசாதாரண லட்சியம் ஒன்று உருவாகியுள்ளது. ஒரு விபரீத சாதனையை தான் ஹெலிகாப்டர் மூலம் ஒரு இளைஞர் முயற்சி செய்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கின்னஸ் உலக சாதனை அமைப்பு பதிவிட்டுள்ளது.
ரோமன் என்கிற 23 வயது இளைஞர் தான் இந்த சாதனை முயற்சியை செய்துள்ளார். பறக்கும் ஹெலிகாப்டரில் அதன் கீழ் பகுதியில் உள்ள கம்பியை பிடித்து கொண்டு இவர் புல் அப்ஸ் செய்துள்ளார். இது கேட்கவே நமக்கு சற்று திகிலை ஏற்படுத்தினாலும், இது உண்மையில் நிகழ்ந்துள்ளது.
ஹெலிகாப்டரில் உள்ளே உட்கார்ந்து பறப்பதே பெரிய சாதனையாக இருக்கும்போது இந்த இளைஞருக்கு பறக்கும் ஹெலிகாப்டரில் புல் அப் செய்ய வேண்டும் என்கிற நோக்கம் இருந்துள்ளது. இந்த வீடியோவில், ஆரம்பத்தில் ஹெலிகாப்டர் மெதுவாக மேலெழும்பி பறக்க தொடங்குகிறது. அதன் பிறகு சில நிமிடங்களில், ஹெலிகாப்டர் பறக்கத் தொடங்கும் போது, அந்த நபர் தரையிறங்கும் ஸ்லைடுகளில் ஒன்றைப் பிடித்துக் கொள்கிறார்.
பிறகு ஹெலிகாப்டரில் இருந்து காற்றில் தொங்கியபடி சிறிது நேரம் புல் அப்ஸ் செய்கிறார். இது பார்ப்பதற்கு அசாத்தியமான ஒன்றாக இருக்கிறது. இந்த வீடியோவை கின்னஸ் உலக சாதனை அமைப்பு தனது அதிகார பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
This website uses cookies.