ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார்.. யார் இந்த யாஹ்யா சின்வர்?

Author: Hariharasudhan
18 October 2024, 11:09 am

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் காட்ஸ் உறுதிப்படுத்தி உள்ளார்.

காசா: கடந்த ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிலவி வருகிறது. இந்தப் போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் இருபுறமும் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்கள் உடன் இன்னும் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதனால் பலர் தங்களது உறவினர்களை இழந்து, வாழ்வாதாரம் இன்றி அவதியுறுகின்றனர். இந்த நிலையில், நேற்று (அக்.17) ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.

இந்த நிலையில், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டு விட்டார் என இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில், “படுகொலை மற்றும் பயங்கர அட்டூழியங்களுக்குப் பின்னால் மூளையாக இருந்த யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டார். இது இஸ்ரேலுக்கு ஒரு குறிப்பிடத்தகுந்த ராணுவ சாதனை ஆகும்.

அதுமட்டுமின்றி, ஈரான் தலைமையிலான தீவிர இஸ்லாத்தின் தீங்கு விளைவிக்கும் முயற்சிக்கு எதிராக முழு சுதந்திர உலகிற்கும் கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. யாஹ்யா சின்வாரைக் கொன்றது, பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்கும் வாய்ப்பை நமக்குத் திறந்துள்ளது. இது காசாவில் ஹமாஸ், மற்றும் ஈரானின் கட்டுப்பாடு இல்லாத ஒரு புதிய மாற்று எதார்த்த உலகிற்கு வழி வகுக்கும்” எனக் கூறியுள்ளார்.

அதேநேரம், இதற்கு முரண்பாடான ஒரு அறிக்கையை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது. அதில், “யாஹ்யா சின்வார் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று நடந்த தாக்குதலைத் திட்டமிட்டு செயல்படுத்தினார். பல இஸ்ரேலிய மக்களின் கொலை மற்றும் கடத்தலுக்கு பொறுப்பானார். காசாவில் உள்ள ஹமாஸ் சுரங்கப்பாதைகளில், தரைக்கு மேலும், கீழும் காசா மக்களுக்குப் பின்னால் மறைந்திருந்த யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டு உள்ளதுர். ஹமாஸின் மூத்த உறுப்பினர்களின் சந்தேகத்திற்கிடமான இடங்களைச் சுட்டிக் காட்டிய உளவுத் தகவலை அடுத்து, தெற்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

அப்போது, அந்தப் பகுதியில் இயங்கி வரும் 828-வது படைப்பிரிவைச் சேர்ந்த இஸ்ரேல் வீரர்கள் மூன்று பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு கொன்றனர். இப்படி கொல்லப்பட்டவர்களில் ஒருவர் தான் யாஹ்யா சின்வார்” என இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. காசாவின் தெற்குப் பகுதியில் அக்டோபர் 16ஆம் தேதி அவர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு இஸ்ரேல் ராணுவம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரின் அறிக்கைக்கு முரண்பாடு உள்ளது. இருப்பினும் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. எனவே, போர் நிறைவு பெறுமா என்ற கேள்வியும் சர்வதேச அளவில் எழுந்துள்ளது. யார் இந்த யாஹ்யா சினவர்? கடந்த 2023, அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதப்படை நடத்திய தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் பணயக்கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கு காரணமானவர்களில் முக்கியமான ஒருவராக யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் அரசு குற்றம் சாட்டியது.

இதையும் படிங்க : நயன்தாராவுக்கு கோபம் வந்தால் இவ்வளவு கேவலமாக நடந்துக்கொள்வாரா?

இவர் காசா பகுதியின் தெற்கு முனையில் உள்ள கான் யூனிஸ் அகதிகள் முகாமில் பிறந்தவர். 62 வயதுள்ள யாஹ்யா சின்வார், அபு இப்ராஹிம் என்று அறியப்படுகிறார். பாலஸ் தீனர்கள் ‘அல்-நக்பா’ (பேரழிவு) என்று அழைக்கும் சம்பவத்திற்குப் பிறகு அவரது குடும்பம் அகதிகளாக மாறியுள்ளனர்.

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!