ஆப்கனில் ரத்தத்தை உறைய வைக்கும் கடும் பனி: இதுவரை 42 பேர் பலி…76 பேர் காயம்..!!

Author: Rajesh
25 January 2022, 8:54 am

காபூல்: ஆப்கானிஸ்தானில் கொட்டித் தீர்க்கும் கடும் பனியில் சிக்கி 42 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. நாட்டின் 15 மாகாணங்களிலும் நேற்று முன்தினம் பனியில் சிக்கி 42 பேர் பலியானதுடன், 76 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Image

கடந்த 20 நாட்களில் ஆப்கன் முழுதும் 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் ஆப்கன் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

Image

வேலையின்மையும் அதிகரித்துள்ளதால், மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது. இந்நிலையில் கடும் பனிப் பொழிவும் ஆப்கன் மக்களை வாட்டி வதைக்கிறது. பனிப்பொழிவு மேலும் கடுமையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!