ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி உக்ரைனுக்கு விசிட்…போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்: குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ்ந்தார்..!!

Author: Rajesh
1 May 2022, 6:07 pm

கீவ்: பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி போர் பாதிப்புக்குள்ளான உக்ரைன் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

உக்ரைன் நாட்டில் போர் பாதிப்புக்குப் பின் சுமார் ஒரு கோடியே 27 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்ததாக புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. இது அந்நாட்டின் மக்கள்தொகையின் 30 சதவீதமாகும்.இதையடுத்து போர் பாதித்த மக்களை பார்வையிட உக்ரைன் நாட்டிற்கு வந்த ஏஞ்சலினா ஜோலி லிவிவ் நகருக்கு சென்றார்.

Image

அங்குள்ள பேக்கரிகளுக்கு எதிர்பாராத விதமாக சென்று அங்குள்ள மக்கள், குழந்தைகளிடம் பேசி உற்சாகப்படுத்தினார். அங்குள்ள ரயில் நிலையங்களில் பணிபுரியும் தன்னார்வலர்களிடம் பேசிய ஏஞ்சலினா, அவர்களிடம் போர் பாதித்த மக்களின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். அங்கு மனநல மருத்துவர்கள் பணியில் உள்ளதாகவும், தினமும் ஒவ்வொரு மருத்துவரும் 15 பேரிடம் பேசி ஆலோசனை வழங்குவதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2 முதல் 10 வயது குழந்தைகளே அங்கு அதிகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அங்குள்ள சிறுவர், சிறுமியர்களுடன் பேசி புகைப்படம் எடுத்து அவற்றை ஏஞ்சலினா மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.இது குறித்து ஏஞ்சலினா கூறியதாவது, அவர்களின் அதிர்ச்சியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. குழந்தைகள் சந்திக்கும் வலியை நான் உணர்கிறேன்.

யாராவது அவர்களை தேற்றினால் அது அவர்களுக்கு மேம்பட்ட உணர்வை தரும் என்றார். மேலும், இந்த சந்திப்பின் போது ஒரு சிறுமி தனக்கு வந்த கனவை ஏஞ்சலினா ஜோலியிடம் கூறி பகிர்ந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

  • china decided to ban american movies shocking marvel fans சூப்பர் ஹீரோ திரைப்பட நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கப்போகும் சீனா?