அவங்க நல்லா சரக்கு மட்டும் அடிப்பாங்க.. அவங்க அரைநிர்வாணமா இருந்தா பார்க்க சகிக்காது : மேற்கு நாடுகள் தலைவர்களை கிண்டல் செய்த புதின்!!
Author: Udayachandran RadhaKrishnan1 July 2022, 7:38 pm
உக்ரைன் மீது ரஷிய அதிபர் புதின் போர் தொடுத்து இருப்பதால், மேற்கு நாடுகள் அவர் மீது கடும் வெறுப்பில் உள்ளனர். இந்நிலையில், ஜெர்மனியில் சில தினங்களுக்கு முன் நடந்த ஜி-7 மாநாடு நடைபெற்றது.
இதில் அமெரிக்க அதிபர் பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் டிருடேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மேல் சட்டை இல்லாமல் வெறும் உடம்புடன் குதிரையில் செல்லும் வீடியோ காட்சியை பார்த்து, இந்த தலைவர்கள் கிண்டலடித்தனர்.
புதின் சட்டையின்றி இருப்பது, குதிரை உடம்பு போல் இருக்கிறது, என்று டிருடேவும், ‘நாமும் சட்டையை கழற்றி, புதினை விட பலசாலிகள் என்பதை காட்டுவோமா?’ என்று போரிஸ் ஜான்சனும் கூறியிருந்தார்.
இவர்கள் கருத்து பேருபொருளாக மாறியது.
இந்த நிலையில் புதினிடம் இது பற்றி கேள்வி கேட்டதற்கு, ‘மேற்கு நாட்டு தலைவர்கள் உடற்பயிற்சியே செய்வது கிடையாது. நன்றாக சரக்கு அடிப்பார்கள். இடுப்புக்கு கீழோ, மேலோ… துணியின்றி இருக்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. அவர்களை இந்த கோலத்தில் எப்படி பார்த்தாலும் சகிக்காது; அருவெறுப்பாக இருக்கும்,’ என்று சிரித்தபடி பதிலடி கொடுத்தார்.