இஸ்லாமியர்களை பாதுகாக்காவிட்டால் இந்தியா பிரிந்து செல்ல வாய்ப்பு : அமெரிக்க முன்னாள் அதிபர் பகீர் தகவல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2023, 1:36 pm

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். தற்போது வாஷிங்டன்னில் இருக்கும் பிரதமர் மோடி முன்னதாக , அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் கூட்டாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது இந்தியாவில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு பற்றி கேட்கப்பட்டது அதற்கு பிரதமர் மோடி, மதம் அல்லது சாதியின் அடிப்படையில் இந்தியா எந்த வகையிலும் இந்தியா பாகுபாடு காட்டுவதில்லை. அனைவரையும் உள்ளடக்கியதே எங்கள் வளர்ச்சிக்கான உறுதிப்பாடு என பதில் கூறினார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு முன்னர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பேட்டி அளித்து இருந்தார். அவர் கூறுகையில், எனக்கு பிரதமர் மோடியுடன் உரையாட வாய்ப்பு கிடைத்தால், இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சிறுபான்மையினவர்களின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்கவில்லை என்றால், ஒரு கட்டத்தில் இந்தியா பிரிந்து செல்வதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், அப்படி பிரிந்து சென்றால் இந்தியாவின் நலன்களுக்கு முரணானது. இது பெரும்பான்மையாக இந்துக்கள் வாழும் இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும் என பாரக் ஒபமா தெரிவித்தார்.

  • Pushpa 2 Beat Bahubali வசூலில் பாகுபலியை மிஞ்சிய புஷ்பா 2 : பாக்ஸ் ஆபிஸ் மன்னனாகும் அல்லு அர்ஜூன்!
  • Views: - 579

    0

    0