பீஜீங்: சீனாவில் போயிங் விமானம் மலையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 132 பயணிகளும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் விமான நிறுவனங்களில் ஒன்றான சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் நேற்று பகல் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து குவாங்சு நோக்கி புறப்பட்டது. அந்த விமானத்தில் 123 பயணிகள் 9 பணியாளர்கள் என மொத்தம் 132 பேர் பயணித்தனர்.
விமானம் அந்நாட்டின் ஷூவாங் மாகாணம் டென்ஜியான் கவுண்டிக்கு உட்பட்ட வுசோ என்ற நகரின் அருகே உள்ள மலைப் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.
விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானம் மலையில் மோதி விழுந்தவுடன் அதில் மளமளவென தீப்பற்றி எரிந்தது. அந்த மலைப்பகுதி முழுவதும் புகைமூட்டமானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர், ராணுவம், போலீசார் என பல்வேறு பிரிவினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மீட்பு பணிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த விமானத்தில் பயணித்த நபர்கள் யாரும் இதுவரை உயிருடன் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சீன அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
This website uses cookies.