அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா… அமெரிக்காவில் முட்டி மோதும் இந்தியர்கள் ; பதற வைக்கும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
22 July 2023, 4:21 pm

அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்த நிலையில், அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் போட்டி போட்டு அரிசிகளை வாங்கி குவிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாசுமதி அல்லாத அரிசிகளை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு நேற்று தடை விதித்து உத்தரவிட்டது. இந்தியாவில் அரிசியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்றும் அரிசியின் சில்லறை விற்பனை விலை ஓராண்டில் 11.5 சதவீதமும் கடந்த ஒரு மாதத்தில் 3% சதவீதமும் உயர்ந்துவிட்டதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

Sugar Rice Free -Updatenews360

இதன் காரணமாக அமெரிக்கா போன்ற உலக நாடுகளில் அரிசியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பற்றாக்குறை ஏற்படும் அச்சத்தால், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அரிசியை மூட்டை மூட்டையாக வாங்கிக் குவிக்கும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, உக்ரைன் – ரஷ்யா போரின் காரணமாக உணவுப் பொருட்களின் விலை சர்வதேச அளவில் உயர்ந்து காணப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் தற்போதைய முடிவு வெளிநாடுவாழ் இந்தியர்களை கதிகலங்கச் செய்துள்ளது.

இந்த நிலையில், வெளிநாடுகளில் இருக்கும் இந்திய மக்கள் அரிசிக்காக முட்டிமோதி கடைகளில் வாங்குகின்றனர். அரிசி விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு உருவாகுமோ என்ற அச்சத்தில் நீண்ட வரிசையில் நின்று கடைகளில் வாங்கிச் செல்கின்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!